அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை | தினகரன்

அமெரிக்க இராணுவ விமானங்கள் விபத்து: ஆறு பேரை காணவில்லை

பனிப்போர் கால ஆயுதத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அதன் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள ஏவுகணைகளை ரஷ்யாவும் தயாரிக்க ஆரம்பிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா ஏற்கனவே மீறிவிட்டது என செவ்வாய்க்கிழமை நேட்டோ குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து புடினின் இந்த கூற்று வந்துள்ளது.

1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் குறுகிய மற்றும் இடைநிலை தாக்குதல் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதற்கான பூர்வாங்க குற்றச்சாட்டே இதுவென புடின் தெரிவித்துள்ளார்.

இடைநிலை வீச்சு அணு ஆயுத ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களை பல நாடுகள் தயாரித்துள்ளதாக தொலைக்காட்சி உரையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.

“தற்போது நிலைமைகள் மாறிவிட்டன. எனவே, இது போன்ற ஆயுதங்களையும் நாம் வைத்துக்கொள்ளலாம் என்று நமது அமெரிக்க பங்காளிகள் நம்புவதுபோல தெரிகிறது” என்று அவர் கூறியுள்ளார். “நமது பதில் என்ன? எளிதான பதில். அப்படியானால் நாமும் அவற்றை தயாரிப்போம்” என்று புடின் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...