1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம் | தினகரன்

1978 அரசியலமைப்பில் இன்னுமே திருத்தம் செய்யப்படாத விடயம்

பிரித்தானியரிடமிருந்து 1948 இல் சுதந்திரம் கிடைத்ததையடுத்து இலங்கையில் மூன்று அரசியலமைப்புகள் இருந்துள்ளன. அவை சோல்பரி அரசியலமைப்பு (1946), முதலாவது குடியரசு அரசியலமைப்பு(1972),இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு (1978).

இந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டன.

சோல்பரி அரசியலமைப்பு 'வெஸ்ட் மின்ஸ்டர்' முறையிலான அரசாங்கத்தைப் பின்பற்றியது. அதன்படி பிரிட்டனின் ஆறாவது ஜோர்ஜ் மன்னர் நாட்டின் தலைவராவார். இந்த அரசியலமைப்பை வரைந்தவர் சேர் ஐவர் ஜென்னிங்ஸ்.

சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக அவர் 29(2) என்ற பிரிவை அரசியலமைப்பில் சேர்ந்திருந்தார். இது அயர்லாந்தின் அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டு சோல்பரி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

1972 இல் உருவாக்கப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு இலங்கையை முடியாட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாற்றியது. பிரிட்டிஷ் மகாராணி தொடர்ந்து நாட்டின் தலைமையாக இந்த அரசியலமைப்பில் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்த அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் என்ற ஒரு ஜனாதிபதி நாட்டின் தலைவராக இருந்தார்.

அடிப்படை உரிமைகள் மற்றும் அரச கொள்கையின் பொதுக் கட்டளை தத்துவங்களும் இதில் சேர்க்கப்பட்டன. பௌத்தத்துக்கு முன்னணி இடம் இந்த அரசியலமைப்பில் வடிக்கப்பட்டது.

இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு 1978 இல் கொண்டுவரப்பட்டது. இது இலங்கையை நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் கொண்டு வந்தது. இது வெஸ்ட் மின்ஸ்டர் முறையை விட பெரிதும் மாறுபட்டது.

‘ஜனாதிபதியின் கீழான அரசாங்க முறை’ என்று இது அழைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக செய்யப்பட்ட 19வது திருத்த சட்டத்தின்படி அரசியலமைப்பு பேரவையின் அறிவுரை மற்றும் சிபாரிசின்படி ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்ற வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் இந்த அரசியலமைப்பின்படி குறைக்கப்பட்டன.

இதனால் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 17 வது திருத்தச் சட்டம் செயற்பட வழிவகுக்கப்பட்டது.

19வது திருத்தச் சட்டம் ஜனாதிபதி முறையை பாராளுமன்ற முறையிலான அரசாங்கமாக மாற்றவில்லை. எனினும் 18வது திருத்தச் சட்டத்தில் இருந்த சில முன்னேற்பாடுகள் நீக்கப்பட்டு தகவல் உரிமை அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது. இது 17ம் திருத்தச் சட்டத்தின் சில முன்னேற்பாடுகளை விஸ்தரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டபூர்வமானதா என்பதைப் பார்ப்போம். இந்த விடயத்தை ஆராயுமுன்னர் அரசியலமைப்பு சட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

அரசியலமைப்பு சட்டம் என்பது சட்டம் மற்றும் அரசியலின் கலவையாகும்.

1978 அரசியலமைப்பில் ஒரு சிக்கல் நிலை இருந்ததை அமரர் என்.எம்.பெரேரா சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பின் ஒரு பாரதூரமான அல்லது இக்கட்டான நிலை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் 19வது திருத்தச் சட்டத்திலும் அது திருத்தப்படவில்லை. எனினும் 19 வது திருத்தச் சட்டத்தின் வெஸ்ட்மின்ட்டர் முறையிலான அரசாங்கத்தின் சில அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை மறுப்பதற்கில்லை.

லக்சிறி மெண்டிஸ்


Add new comment

Or log in with...