50 இலட்சம் கையொப்பம் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிப்பு | தினகரன்

50 இலட்சம் கையொப்பம் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிப்பு

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு கௌரவமளித்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது அவசியமென வலியுறுத்தும் 50,00,000 கையொப்பங்களை உள்ளடக்கிய மகஜரின் முதற்தொகுதி நேற்று மஹிந்த ராஜபக்ஷ எம்.பியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் 50,00,000 கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் அதன் அடையாளமாக நேற்று ‘பெவிதி ஹண்ட’ அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரினால் நேற்று மேற்படி கையொப்பம் அடங்கிய மகஜர் மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பியிடம் கையளிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நிலையிலுள்ள நாட்டை ஸ்திரமுள்ள நாடாக கட்டியெழுப்புவதற்கு பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் ஜனநாயக ரீதியில் சிறந்த நிலைமையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 50,00,000 கையொப்பங்களை திரட்டும் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு கருத்துத் தெரிவித்த மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், நாட்டில் 30 வருட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அனைவரும் சுயாதீனமாக செயற்படுவதற்கு வாய்ப்பளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்பதை முழு நாடும் அறியும். எனினும் இந்நாட்டின் 2015 ஆம் ஆண்டு சிலரது பொய்யான கருத்துக்களுக்கிணங்க நாட்டில் மாற்றங்களை கொண்டுவரவேண்டுமென செயற்பட்டனர். அந்த மாற்றம் முறையாக மேற்கொள்ளப்பட்டதா? என்பதே கேள்விக்குறி என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

 


Add new comment

Or log in with...