எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது | தினகரன்

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது

ஆந்திராவுக்கு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை சென்னை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக கச்சதீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்ததாக புகார் கூறப்பட்டது. இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி மிரட்டியதாக கரைதிரும்பியவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 இதனிடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படை சிறைபிடிப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

 


Add new comment

Or log in with...