அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்த கிண்ணம்; ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி | தினகரன்

அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்த கிண்ணம்; ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி

திருகோணமலை பிக்புட் விளையாட்டுக் கழகம் அமரர் செகராஜசிங்கம் ஞாபகார்த்தமாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை நடத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 6 அணிகள் பங்கு கொண்டன. இறுதிபோட்டியில் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து திருகோணமலை வளர்ந்தோர் அணி மோதியது. இதில் ஒலிம்பிக்ஸ் கழகம் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

தம்பலகாமம் நிருபர்


Add new comment

Or log in with...