இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் வீரரான கெளதம் கம்பிர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணி 2011 உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு மிக முக்கிய பங்கினை கம்பிர் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கெளதம் கம்பிர் வீடியோ ஒளிப்பதிவொன்றின் மூலமே இவ்வாறு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
37 வயதான கம்பிர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 4154 ஓட்டங்களையும் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 39.68 எனும் ஓட்ட சராசரியின் அடிப்படையில் 5238 ஓட்டங்களையும் 37 ரீ20 போட்டிகளில் விளையாடி 27.41 எனும் ஓட்ட சராசரியின் அடிப்படையில் 932 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ரஞ்சி கிண்ணத்தொடரில் விளையாடி வரும் கம்பிர் இன்று வியாழன் (6) நடைபெறவுள்ள ஆந்திரா அணியுடான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Add new comment