சாகித்ய அகாடமி விருதுக்கு ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவல் | தினகரன்

சாகித்ய அகாடமி விருதுக்கு ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவல்

'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதிய பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாகித்திய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 'சஞ்சாரம்’ என்னும் நாவலை எழுதியதற்காக பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் இந்த(2018) ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்தி சொற்பொழிவு ஆகியவற்றின் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...