Home » இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

- உலகம் முழுவதும் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு

by Prashahini
December 10, 2023 1:00 pm 0 comment

டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு வேலைத் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசியல், கலாச்சார மற்றும் மனித உரிமைகள் கட்டமைப்பிற்குள் மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை விளக்குவதே இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT