'அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை' | தினகரன்

'அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை'

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கோலியிடம் பயப்பட தேவையில்லை என்று அவுஸ்திரேலியா முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார்.

இந்தியா- − அவுஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி 6-ம் திகதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடர் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் கூறியதாவது:-

இந்திய அணி தலைவர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு அவுஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

கோலி ஓட்ட வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ஓட்டங்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை. அவருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். மிச்சல் ​ேஜான்சன் சில முறை கோலிக்கு ஆக்ரோ‌ஷமான பந்துவீச்சு, உடல் செய்கை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.

உள்ளூரில் விளையாடுவதால் அவுஸ்திரேலிய வீரர்கள் செயல்பாடு வலிமையாக இருக்க வேண்டும். தற்போதைய அணி ஆக்ரோ‌ஷமான மனப்பான்மையுடன் ஆடாவிட்டால் அது குப்பைக்கு ஈடாகும். வார்த்தைகள், செயல்கள் ஒன்றாக அமைய வேண்டும்.

2014-−15 தொடரில் இந்திய அணி 0-−2 என்ற கணக்கில் இழந்தது. கோலி 86.26 சராசரியுடன் 692 ஓட்டங்களை குவித்தார்.

நான் அணியின் தலைவராக இருந்தால் கோலிக்கு நல்ல தொடக்கம் அமையவிட மாட்டேன். ஆரம்பத்திலேயே பவுண்டரிகள் அடிக்க விடக்கூடாது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் தான் கோலியை அதிகமுறை சிரமத்துக்கு உள்ளாக்கினார்.


Add new comment

Or log in with...