இன்றைய அரசியல் போக்கு எமது நாட்டுக்கு உகந்ததல்ல! | தினகரன்

இன்றைய அரசியல் போக்கு எமது நாட்டுக்கு உகந்ததல்ல!

தற்போது எமது நாட்டில் சிலர் இன்னொரு சாராரை காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அராஜக நிலைமைக்கு நாட்டைத் தள்ளியுள்ளார்கள். சிலர் தமது எல்லையைக் கடந்து நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வெளிநாட்டவர்களின் உதவியைப் பெற பல சூழ்ச்சிகளைப் புரிவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

சபாநாயகர் மத்தியஸ்தமாக செயல்படாமல் கட்சி ரீதியாக செயல்படுவதனால் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அபகீர்த்தி அடையும் நிலைமை தோன்றியுள்ளது. தூதுவர்களை அழைத்து, சர்வதேச ஊடகவியலாளர்களை இலங்கைக்கு அழைத்து நாட்டின் பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல சபாநாயகர் முயற்சி செய்தார். வெளிநாட்டுத் தலையீடில்லாமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் கோணத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.

சபாநாயகர் தனது பொறுப்புகளுக்கு அப்பால் சென்று கட்சி ரீதியாக செயல்படுவது சரியல்ல.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இச்சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நல்ல முடிவையே எடுத்துள்ளார். பல வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி உரிய தீர்வை வழங்கியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அரசியலமைப்பின்படி அமைச்சரவை கலைக்கப்பட்டால் அனைத்து அமைச்சர்களினதும் பதவிகள் இரத்தாகி விடும். அதன்படி பிரதமரின் பதவி இரத்தாகியுள்ளது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கியிருந்து கொண்டு, அரசியல் பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டின் புகழுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றி கொள்ளக் கூடுமென நம்பப்படும் நபரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதியால் முடியும்.

பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின் நம்பிக்கைையப் பெறக் கூடிய நபரை ஜனாதிபதி நியமித்தார். ஜனாதிபதிக்குள்ள அரசியலமைப்பு அதிகாரத்தை சவாலுக்குட்படுத்த யாருக்கும் இயலாது. சபாநாயகராலோ அல்லது வேறு அதிகாரத்திலுள்ளவர்களாலோ மீற முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதும் அரசியலமைப்பின் பிரகாரமாகும்.

கடந்த காலங்களில் நாட்டின் கலாசாரம், நாகரீகம், தனித்தன்மை என்பன குறித்து கவனமெடுக்கப்படவில்லை. நாட்டின் தொல்பொருட்களை அழித்து தேசியத் தனித்தன்மையை அழித்தார்கள். மதத் தலைவர்களை துன்புறுத்தி சிறையிலிட்டு மதத்தை அவமதித்தார்கள். தேரர்கள் தேசியப் பிரச்சினையைப் பற்றிப் பேசியதாலேயே சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

2015இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சூழ்ச்சியான ஒன்றாகும். புதிய பிரதமரை நியமித்ததன் மூலம் சூழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நாடு மிக வேகமாக முன்னேற்றமடைந்தது. இந்த சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதி நாட்டின் நன்மை கருதி எடுத்த முடிவு முக்கியமானதாகும். ஆனால் சிலர் சர்வதேசத்தில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள். அரசியல்வாதிகள் ஐரோப்பிய நாடுகளின் நன்மைக்காக நடவடிக்கைகளில் ஈடுபடாமல் புத்தியுடன் செயல்பட வேண்டும். மக்களிடையே தவறான எண்ணங்களைப் பரப்பி, மக்களுக்கூடாக குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அரசியல்வாதிகள் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

ஆகவே பொய்யான பிரசாரங்களுக்கு ஏமாறாமல் தங்கள் கருத்தை மக்கள் தெரிவிக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் மக்கள் நாட்டின் அமைதி நல்லிணக்கத்துக்கு தேவையான புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். களவெடுக்கும், அதற்கு உதவி செய்யும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியும் தலைவர்களை அரசியல்வாதிகளாக மக்கள் தெரிவு செய்யாதிருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டது மேற்குலக நாடுகள் சிலவற்றின் அரசியல் அதிகார கேந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல இலங்கையின் சிலரும் சர்வசேத்துக்கு திரிக்கப்பட்ட அறிக்கைகளை வழங்குவதை காணக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு செய்வது சமூகவிரோத செயலாகும்.

வெளிநாட்டுறவை நல்ல விதமாகப் பேண வேண்டியது இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களின் பொறுப்பாகும். சம்பவத்தை அரசியல் கோணத்தில் பார்க்காமல் அனைத்தையும் நடுநிலையாகப் பார்க்க வேண்டும். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் அரசியல் முறையிலிருந்து விடுபட்டு தங்களுடைய நன்மையைக் கருதாமல் மக்களின் நன்மை கருதி செயல்பட வேண்டும். சாதாரண மக்களை இது குறித்து வழிநடத்த வேண்டியது மதத் தலைவர்களினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பாகும்.

இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை சமாதானமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்ததற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போனதே காரணமாகும். நாட்டின் பெரும்பான்மையானோர், மஹா சங்கத்தினர், ஏனைய மதத்தலைவர்கள், சாதாரண மக்கள் இது சரியான நடவடிக்கையென ஏற்றுக்கொண்டா ர்கள்.

இலங்கைக்குப் பொருந்தாத கட்சி அரசியலை செயல்படுத்தி சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து வெளிநாட்டு சக்திகளுக்கு நாம் கைப்பொம்மைகளாக மாறக் கூடாது.

நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் எமது மத தர்மங்களுக்கு, கலாசாரத்துக்கு பொருத்தமான வகையில் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்திப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

பமுதினி சமரநாயக்க
(தினமின)


Add new comment

Or log in with...