Home » ILOவின் நியமங்களுக்கு ஏற்ப கடற்றொழிலாளர் தரம் உயர்வு

ILOவின் நியமங்களுக்கு ஏற்ப கடற்றொழிலாளர் தரம் உயர்வு

மேம்படுத்த அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதி

by gayan
December 9, 2023 7:20 am 0 comment

கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரது தொழில் கௌரவத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனமான சி 188 உறுதி செய்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென தொழில் மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் C-188 பிரகடனத்தை உறுதி செய்வது தொடர்பான வரைவு விதிமுறை திருத்த சட்மூலத்தை சமர்ப்பித்தல் மற்றும் பங்குதாரர்களை வலுப்படுத்தல் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போது அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

இதன் மூலம் இத்துறை சார்ந்த சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்கும் வலுவான பின்னணியை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர், இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை நான் பாராட்டுவதுடன் ILO அதிகாரிகளின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. தொழில் அமைச்சு, இந்த செயல்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் கடற்றொழில் அமைச்சு அதன் முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT