கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்குபற்றவில்லை
பாராளுமன்ற சபை நடவடிக்கையில் இன்றும் (29) கலந்து கொள்வதில்லை என ஆளும் தரப்பு முடிவுசெய்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வையும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9.00 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஆளும் தரப்பைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைய அவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில், ஆளும் கட்சி பகுதிக்கு சமூகமளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தின தேரர் இன்றைய தினம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment