யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்; இரு முச்சக்கர வண்டிகள் சேதம் | தினகரன்

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்; இரு முச்சக்கர வண்டிகள் சேதம்

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்; இரு முச்சக்கர வண்டிகள் சேதம்-Petrol Bomb Attack to House in Jaffna-Three Wheeler-M Cycle Burnt

யாழ். நகரில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு ஆட்டோ எரிந்து சேதமாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் வைமன் வீதியில் இன்று அதிகாலை (29) 8 பேர் கொண்ட கும்பலால் குறித்த தாக்குதல் சம்பம் இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியிலுள்ள வாகன திருத்தும் கடை (கராஜ்) உரிமையாளரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்; இரு முச்சக்கர வண்டிகள் சேதம்-Petrol Bomb Attack to House in Jaffna-Three Wheeler-M Cycle Burnt

கராஜ் உரிமையாளர் நேற்று இரவு இரு ஆட்டோவையும் வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியாகவும், அதன் பின் நள்ளிரவு கடந்து முற்பகல் 1.55 மணியளவில், பாரிய சத்தமொன்று கேட்டு வெளியே வந்த நிலையில், 8 பேர் முகமூடியுடன், மேட்டார் சைக்கிளில் வந்து, வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் இரு முச்சக்கரவண்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்; இரு முச்சக்கர வண்டிகள் சேதம்-Petrol Bomb Attack to House in Jaffna-Three Wheeler-M Cycle Burnt

தாம் எவருடனும் எந்த பிரச்சினைக்கும் செல்வதில்லை என்றும், யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்ததென்று தனக்குத் தெரியாது எனவும் வீட்டு உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...