பாராளுமன்ற சபாநாயகர்களின் வகிபாகம் | தினகரன்

பாராளுமன்ற சபாநாயகர்களின் வகிபாகம்

1947இல் நடைபெற்ற தேர்தலின் பின்னர் முதலாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஸ்ரீமத் பிரான்சிஸ் மொலமுரே தெரிவு செய்யப்பட்டார். அவர் அரச பிரதிநிதிகள் சபை காலத்திலிருந்து அரசியல் வாழ்வில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு பல சேவைகளைப் புரிந்தவர். அவர் பலாங்கொடை தொகுதியிலிருந்து அரச பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவாகியிருந்தார்.

1947ம் ஆண்டு பாராளுமன்றம் கூடியபோது எதிர்க் கட்சியினரால் குருநாகல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் அரச சட்டத்தரணியுமான சுயாதீனமாக போட்டியிட்ட ஸ்ரீ நிஸ்ஸங்கவே முன்மொழியப்பட்டார். ஆனால் அரசாங்க கட்சியினரால் முன்மொழியப்பட்ட ஸ்ரீமத் பிரான்சிஸ் மொலமுரேக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்ததால் அவரே முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயராக நியமிக்கப்பட்டார்.

1936ம் ஆண்டு இரண்டாவது அரசாங்க சபை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்னர் 1935ம் ஆண்டு அங்கு பரவிய மலேரியா நோயைக் கட்டுப்படுத்த நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சமூக சேவையாளர்கள் வருகை தந்து அவர்களுக்கு உதவி செய்தார்கள்.

இதேவேளை ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இடதுசாரி அரசியல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இங்கு வந்து இலங்கை சமசமாஜக் கட்சியை அமைக்க ஆரம்ப கர்த்தாக்களாக இருந்த பலரும் இந்த நிவாரணக் குழுவில் இருந்தார்கள். தலைநகரிலிருந்து உலர் உணவுப் பொருட்களையும் வைத்திய உதவியையும் கொண்டு வந்த பலர் இருந்தார்கள். அங்கு நோயாளர்களுக்கு உதவுவதற்காக அக்குறனையிலிருந்து வந்திருந்த டொக்டர் சுகீஸ்வர விக்கிரமசிங்கவின் உதவியாளராக பலபிட்டியவைச் சேர்ந்த கொன்வின் றெஜினோல் த சில்வாவும் வந்திருந்தார்.

பொரளுகொடவிலிருந்து வந்திருந்த பிலிப் குணவர்தன, தொடலஸ்கவிலிருந்து வந்திருந்த நாணயக்கார பதிரகே மாட்டின் பெரேரா ஆகியோர் நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று பருப்பை விநியோகம் செய்தார்கள். அதனால் ‘பருப்பு மாத்தயா’ என பட்டப் பெயரையும் பெற்றார். அன்று அவர் அம்மக்களுடன் நடந்து கொண்ட விதத்தால் 1936ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டபோது மீதேனிய முகாந்திரம் பரம்பரைக்கேயுரிய ருவன்வெல்ல தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பத்தை ‘பருப்பு மாத்தயாவுக்கு’ அம்மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள்.

1947ம் ஆண்டு தேர்தலில் டி. எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று அவர் பிரதமரானார். அவரது பாராளுமன்ற கூட்டத்தின்போது பலாங்கொடை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மொலமுரே முதலாவது பாராளுமன்ற முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்டியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டீ. பி. இலங்கரத்னவுக்கு எதிராக தேர்தல் வழக்கொன்று இருந்ததால் அவரது தொகுதிக்கு போட்டியிட்டு அவரது இளம் மனைவியான தமரா குமாரி இலங்கரத்ன போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சபாநாயகர் மொலமுரே முன்னிலை சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர் ஐ. எம். ஆர். ஏ. ஈயெகொல்லவை சபையில் தூஷண வார்த்தை கூறியதாக அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினார். ஆனால் ஈரியாகொல்ல மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வந்து அவர் கூறியது தூஷண வார்த்தையல்லவென நிருபித்தார். உடனே அவரை அழைத்து மன்னிப்பும் கேட்டார். அன்று தொடக்கம் தனக்கு பரிச்சயம் இல்லாத வார்த்தைகளை செவிமடுக்கும்போது பிரதான மொழிபெயர்ப்பாளரை அழைத்து அதற்கான விளக்கத்தை கேட்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்.

நாட்டின் புத்திஜீவிகள், கலைஞர்கள், பண்டிதர்களுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்திருந்தார். அவர்களை அழைத்து விருந்து வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுவார்.அதன் மூலம் காவியங்கள் பற்றியும் சரித்திர தகவல்களையும் அறிந்து கொண்டார்.

ஒருமுறை கலைஞரான ஸ்ரீசந்திரரத்ன மாவைசிங்கவுடன் இரகசியமான பயணமொன்று சென்றுள்ளார். அது பற்றி அவர் எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் ஒரு தடவை கிராமமொன்றில் கைரேகை சோதிட நிபுணரொருவரை மாறுவேடத்தில் சந்திக்க சென்றுள்ளார்கள். மொலமுரே முதலாளியொருவர் போல் வேடமிட்டுச் சென்றுள்ளார். அந்த கைரேகை சோதிடர் மொல்லமுரேயின் கையைப் பார்த்து விட்டு "உங்களால் என்னை ஏமாற்ற முடியாது. நீங்கள் முதலாளியா? நீங்கள் இந்த நாட்டின் அரசர் போல் வாழும் ஒருவர் என ரேகைகளை கூறுகின்றன. நான் கூறியது பொய்யென்றால் எனது தொழிலைக் கூட விடுவதற்கு தயாராகவுள்ளேன்" என்று கூறினார்.

அதன் பின்னர் தான் யாரென்பதையும் கூறிவிட்டு அவருக்கு காணிக்கையும் வழங்கினார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் காலமானார்.

அதன் பின்னர் எமது இலங்கை சரித்திரத்தில் பல சபாநாயகர்கள் பதவி வகித்தார்கள். அல்பர்ட் எப். பீரிஸ், ஆர். எஸ். பெல்பொல, ஸ்டான்லி திலகரத்ன, ஹியூ பெர்ணாந்து, பாக்கீர் மாக்கார் , ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், அனுர பண்டாரநாயக்க, லொக்குபண்டார, சமல் ராஜபக்ஷ ஆகியோருடன் தற்போது கரு ஜயசூரியவும் சபாநாயகராக பதவி வகிக்கின்றார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நிதியமைச்சர் கலாநிதி என். எம். பெரேரா ஆற்றிய உரைக்கு எதிராக ஸ்டான்லி திலகரத்ன மிரட்டுவது போல் அழித்த உத்தரவு காரணமாக என். எம். பெரோவுக்கு கோபம் மூண்டது.

‘அவர் கூறியதற்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன்’ என்று பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆசனத்துக்கு அருகில் சென்று கூறினார். அதற்கு அவர் ‘அது பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கு விரோதமானது’ என கூறினார். உடனே தனது ஆசனத்திற்கு சென்று என். எம். பெரேரா அமர்ந்து கொண்டார்.

ஆர். எஸ். பெல்பொல சபாநாயகராக இருந்த காலத்தில் இருபது வருடங்கள் நாட்டில் பொறுப்பாக அமைச்சுப் பதவி வகித்தவர் சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர. இலவசக் கல்வியின் தந்தை என கூறப்பட்ட அவர் மிகவும் கஷ்ட நிலைமையில் இருந்த போது அவரது சீடரான ஸ்ரீமத் ஒலிவர் குணதிலக்கவின் ஆலோசனைப்படி சபாநாயகர் பெல்பொலவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். "இது எனது இறுதிக்காலம் நான் மிகவும் சிரமத்திலுள்ளேன். எனது எஞ்சிய காலத்தை கடத்துவதற்கு உதவித் தொகையை பெற்றுத் தாருங்கள்" என எழுதியிருந்தார். இதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து பெல்பொல சபாநாயகர் பத்தாயிரம் ரூபா போனஸ் தொகையும் மாதத்திற்கு 500 ரூபா உதவித் தொகையையும் அமைச்சருக்கு கிடைக்கச் செய்தார்.

பாராளுமன்றத்தால் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறிக்க ஜே. ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். அதற்கு சில நாட்களுக்குப் பின்னர் அனுர பண்டாரநாயக்கவுக்கு சபாநாயகர் பதவியை வழங்கினார். அதற்கு காரணம் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மனதை சாந்தப்படுத்தவென அரசியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்.

பாராளுமன்றத்தில் சபாநாயகராக பதவியேற்ற பேருவளையைச் சேர்ந்த பாக்கீர் மாக்கார் பல துறைகளிலும் நிறைந்த அறிவைப் பெற்றவர். பௌத்த தர்மத்தை பற்றி நன்கறிந்தவர். அவர் "எனது ஒரு கையில் குர்ஆனும் மறுகையில் பௌத்த தர்ம உபதேசமும உள்ளன. தான் அவற்றின்படியே செயல்படுகின்றேன். அனைவரையும் சமமாகப் பார்த்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டியது கடமையாகும். அதனால் நாம் எப்போதும் ஒற்றுமையாக சமாதானத்துடன் அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும்" எனக் கூறினார்.

சிங்கள பண்டிதரும் இலங்கை கலாசாரத்தை பின்பற்றியவருமான லொக்குபண்டார சபாநாயகராக பதவி வகித்த வேளையில் தனக்குக் கீழேயுள்ள கட்சி, எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒழுக்கமாக பொறுப்புடன் செயலாற்ற வைத்தார். அதேபோல் சிங்கள இலக்கியத்தின் பெருமையை அவர்களுக்கு உணர்த்த பெரும்பாடுபட்டார்.

அதன் பின்னர் சமல் ராஜபக்ஷ சபாநாயகராக இருந்த காலத்தில் மிகவும் பொறுமையுடனும் சிறந்த நிர்வாகியாகவும் பாதையை வகுத்து பணியாற்றி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

சோமசிறி கஸ்தூரியாராச்சி
(ரெஸ)


Add new comment

Or log in with...