பங்களாதேஷ் தொடரில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகல் | தினகரன்

பங்களாதேஷ் தொடரில் இருந்து ஜேசன் ஹோல்டர் விலகல்

மேற்கிந்திய தீவு அணி தலைவர் ஜேசன் ஹோல்டர் தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி பங்களாதோஷ் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சிட்டஹாங்கிலும், 2-வது டெஸ்ட் டாக்காவிலும் நடக்கிறது.

இந்த தொடர் வரும் 22-ம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான மேற்கிந்திய தீவு அணியில் தலைவர் ஜேசன் ஹோல்டர் இடம்பிடித்திருந்தார். உலகக்கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று தொடரில் விளையாடும்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் தற்போது அதிக வலியைக் கொடுத்ததால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஜேசன் ஹோல்டருக்குப் பதிலாக மேற்கிந்திய தீவு அணியில் ரெய்மன் ரெய்பெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹோல்டர் இல்லாததால் கே பிராத்வைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...