நெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி | தினகரன்

நெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி

நெஸ்லே அனுசரணையில் கொழும்பு வலய சிறுவர் மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் 33 பாடசாலைகள் பங்கேற்றன.மொத்தமாக 864 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் தரம் 3,4,5 பிரிவில் கல்வி பயிலும் மாணவ , மாணவிகள் கலந்து போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டியில் தரம் 3 ஆண்கள் பிரிவில் ஆனந்த கல்லூரி வெற்றி பெற்றது. தரம் 3 பெண்கள் பிரிவில் விஷாகா கல்லூரியும் தரம் 4 ஆண்கள் பிரிவு ரோயல் கல்லூரியும் தரம் 4 பெண்கள் பிரிவில் விஷாகா கல்லூரியும் வெற்றி பெற்றன.தரம் 5 ஆண்கள் பிரிவில் ரோயல் கல்லூரியும் பெண்கள் தரம் 5 பிரிவில் விஷாகா கல்லூரியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...