டிரம்ப் வேண்டுகோளையடுத்து அமெ. சட்ட மாஅதிபர் விலகல் | தினகரன்

டிரம்ப் வேண்டுகோளையடுத்து அமெ. சட்ட மாஅதிபர் விலகல்

அமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். அவரது எதிர்காலத்துக்கும் எங்களின் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெப் செஷன்ஸ் தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் அவரை டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளராக முன்பு இருந்துவந்த செஷன்ஸ், பாரபட்சமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்த விசரணையில் இருந்து விலகி, துறையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள ராட் ரான்ஸ்டெனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.


Add new comment

Or log in with...