தீபாவளி தினத்தை முன்னிட்டு காரைதீவில் பூப்பந்தாட்ட போட்டி | தினகரன்

தீபாவளி தினத்தை முன்னிட்டு காரைதீவில் பூப்பந்தாட்ட போட்டி

காரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வருடாவருடம் நடாத்திவரும் காரைதீவு விளையாட்டுக்கழக கனிஷ்ட வீரர்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப் போட்டி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலை காரணமாக கனிஷ்ட வீரர்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப் போட்டி இடம்பெறவில்லை. எனினும் பூப்பந்தாட்ட போட்டிகளின் இறுதி சுற்று போட்டிகள் தீபாவளி தினமன்று விபுலானந்த மத்திய கல்லுரியின் உள்ளரங்கில் இடம்பெற்றது.

கழகத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளில் கழக போசகர் கழக சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

20 வயதுக்குட்பட்டவர்கள் 21-40 வயதுக்குட்பட்டவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒற்றையர் இரட்டையர் போட்டிகள் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

காரைதீவு குறூப் நிருபர் 

 


Add new comment

Or log in with...