தரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம் | தினகரன்

தரையில் படுத்துறங்கிய விமான ஊழியர்கள் நீக்கம்

கடந்த மாதம் ஸ்பெயின் விமான நிலையம் ஒன்றின் தரையில் படுத்திருந்த புகைப்படம் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆறு விமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ரியான்ஏர் அறிவித்துள்ளது.

ஊழியர்களின் தவறான நடத்தை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விமான நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி தங்களது விமானம் திருப்பிவிடப்பட்டதால் ஸ்பெயினின் மலகா விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஊழியர்கள் இளைப்பாறுவதற்காக சிறப்பு விருந்தினர்களுக்கான கூடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும், அந்தக் கூடம் ஏற்பாடு செய்யப்படும் வேளையில் ஊழியர்கள் வேறு ஓர் அறையில் சற்று நேரம் செலவிட்டதை நிறுவனம் ஒப்புக்கொண்டது.

ஆனால், படத்தில் உள்ளதுபோல் எந்த ஊழியரும் தரையில் படுத்து உறங்கவில்லை என்றும் அது தவறான நோக்கத்துடன் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட போலியான படம் என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டது.

சர்ச்சைக்குரிய அந்தப் படம் இணையத்தில் பகிரப்பட, பலர் நிறுவனத்தைச் சாடினர்.


Add new comment

Or log in with...