Friday, March 29, 2024
Home » இந்தியா – ஆசியான் வர்த்தகம் 86.9 பில். டொலர்களாக உயர்வு

இந்தியா – ஆசியான் வர்த்தகம் 86.9 பில். டொலர்களாக உயர்வு

by Rizwan Segu Mohideen
December 6, 2023 2:17 pm 0 comment

இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பான ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 86.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

‘ஆசியான் அமைப்பு நாடுகள் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியாக மாறியுள்ளது’ என்று தெரிவித்துள்ள ‘இந்தியா ப்ளும்ஸ்’ இணைதளம், ‘இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்திய – ஆசியான் கூட்டுறவு நிதியம், ஆசியான் – இந்திய பசுமை நிதியம், ஆசியான் – இந்திய விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்தி நிதியம் என மூன்று நிதியங்களை இந்தியா உருவாக்கியுள்ளது’ எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்பு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களும் நிலவி வருகின்றன. அதனடிப்படையில் ஆசியான் அமைப்பு நாடுகள் பலவற்றுடன் இந்தியா கூட்டு இரராணுவ பயிற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகின்றது.

கடல்சார் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி போன்ற விடயங்கள் குறித்தும் ஆசியான் அமைப்புடன் இந்தியா உரையாடல்களை மேற்கொண்டிருப்பதும் தெரிந்ததே.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT