மனுஷ நாணயக்கார இராஜினாமா | தினகரன்

மனுஷ நாணயக்கார இராஜினாமா

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சபாநாயகர் இதனை சட்டபூர்வமற்ற அரசாக அறிவித்துள்ளதால் தனக்கு தொடர்ந்து இந்த அரசில் அமைச்சராக நீடிக்க முடியாது என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடிய பின்னர் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றேன்.

ஆனால் பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருப்பது அரசியலமைப்பிற்கு முரண் என்று அறிவித்துள்ளார்.

பெரும்பான்மையை காண்பிக்கும் வரை முன்னைய அரசையே ஏற்பதாக சபாநாயகர் கூறியுள்ளார். எனவே இந்த விடயம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.எனது ஆதரவாளர்களுடனும் அரசியலில் நெருக்கமானவர்களுடனும் இது தொடர்பில் ஆராய்ந்தேன். தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்க முடியாது என்பதால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்கிறேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பா)


Add new comment

Or log in with...