இலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம் | தினகரன்

இலங்கையில் மிக விரைவில் புதிய Oppo A7 அறிமுகம்

இலங்கையில் புதிய A7 தொலைபேசியைஅறிமுகம் செய்ய Oppo திட்டம்-Oppo A7 Coming Soon

A தெரிவுகள் உயர் வலிமை வாய்ந்த பற்றரி, உயர் வடிவமைப்பு
AI செயற்படுத்தப்பட்ட கமராக்களை கொண்டன

Selfie expert மற்றும் leader ஆக திகழும் Oppoஇ தனது புதிய கையடக்க A7 தொலைபேசியை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வலிமை வாய்ந்த பற்றரி, நவீன கண்கவர் வடிவமைப்பு, உயர் வினைத்திறன், பிரத்தியேகமான waterdrop வடிவமைப்பு மற்றும் intelligent Artificial Intelligence (AI) செயற்படுத்தப்பட்ட கமராக்கள் போன்றவற்றுடன் Oppo A7, Oppo வின் A தெரிவுகள் ஸ்மார்ட்ஃபோன்களில் புதிய அறிமுகமாக அமைந்திருக்கும். இலங்கையின் நுகர்வோருக்கு சகாயமான  விலையில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும்.

Oppo இன் A தெரிவு ஸ்மார்ட் ஃபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அதிகளவு விற்பனையாகும் ஸ்மார்ட் ஃபோன் தெரிவுகளாக காணப்படுகின்றன. புதிய Oppo A7 இல் AI 2.0 உடனான 16 Mega Pixel முன்புற கமரா காணப்படுவதுடன், மற்றும் 13MP+2MP இரட்டை பின்புற கமராக்கள் காணப்படுகின்றன. 4230mAh கொள்ளளவுடைய பாரிய பற்றரி அடங்கியுள்ளதுடன், நாட்டின் வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் நவீன உள்ளம்சங்களைக் கொண்டு அமைந்திருக்கும்.

இலங்கையில் புதிய A7 தொலைபேசியைஅறிமுகம் செய்ய Oppo திட்டம்-Oppo A7 Coming Soon

Oppo லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை நிவர்த்தி செய்வதாக Oppo A7 அமைந்திருக்கும் என்பதுடன், இரட்டை கமரா வடிவமைப்பு, உயர் முழுத்திரை மற்றும் நீடித்த பற்றரி ஆயுள் காலம் போன்றன சகாயமான விலையில் காணப்படுகின்றன. நீடித்த பற்றரி ஆயுட்காலத்துடன், தமது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நாள் முழுவதும் படமெடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தமது கையடக்கதொலைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய கவலையின்றி, தமது தினசரி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

வேகமாக பற்றரி சார்ஜ் இறங்கும் நிலை, புதிய 4230mAh திறன் வாய்ந்த பற்றரியின் உள்ளடக்கத்துடன் A7 இல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு வேகமாக பற்றரி சார்ஜ் இறக்கும் நிலை பெரும் சிக்கலான நிலையாக அமைந்துள்ள நிலையில், A7 இல் உள்ளடக்கப்பட்டுள்ள 4230mAh திறன் வாய்ந்த சிறந்த தீர்வாக அமைந்திருக்கும்.

இலங்கையில் புதிய A7 தொலைபேசியைஅறிமுகம் செய்ய Oppo திட்டம்-Oppo A7 Coming Soon

பிரத்தியேகமான Waterdrop திரை வடிவமைப்புடன், மேல் பகுதியில் அழைப்பை பெறும் பகுதி, கமரா மற்றும் வெளிச்சம் உணரி போன்றன அடங்கியுள்ளன. இவை ஒடுக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளதால், பாவனையாளருக்கு அதிகளவு உள்ளடக்கங்களை பார்வையிடக்கூடிய வசதி திரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கமரா மற்றும் flash light ஆகியன அடங்கியுள்ளதுடன், இரு நீர் துளிகளை போன்று காணப்படுகின்றன.

புதிய Oppo A7 நவம்பர் மாதம் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், முன்னர் அறிமுகம் செய்திருந்த A தெரிவு F தெரிவு போன்றவற்றுக்கு பாவனையாளர்கள் வழங்கியிருந்த பெருமளவு வரவேற்பைப் போன்று, இதற்கும் வழங்குவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். Oppo A7 நடுத்தரளவு ஸ்மார்ட்ஃபோன் வகையாக சந்தையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பிரத்தியேகமான வடிவமைப்பு, நவீன உள்ளம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த மற்றும் சகாயமான அடுத்த தலைமுறை ஸ்மார்ட்ஃபோனாக அமைந்திருக்கும் என்பதுடன், இளைஞர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...