Friday, March 29, 2024
Home » O/L பரீட்சையில் தோற்றியோருக்கு தொழிற்கல்விக்கான வாய்ப்புக்கள்

O/L பரீட்சையில் தோற்றியோருக்கு தொழிற்கல்விக்கான வாய்ப்புக்கள்

525 பாடசாலைகளில் பயிற்சி, விருப்பமானோர் விண்ணப்பிக்கலாம்

by gayan
December 6, 2023 6:45 am 0 comment

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்கள் சகலரும் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களென, சமன்ரூபசிங்க தெரிவித்துள்ளார். இத்தொழிற்கல்வி பாடத்திட்டம் 525 பாடசாலைகளில் போதிக்கப்படவுள்ளதாகவும் வர்த்தமானி வெளியான பின்னர் விருப்பமானோர் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென்றும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவ பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவால் தயாரிக்கப்பட்ட ‘101 உரையாடல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே சமன் ரூபசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம் முதலாம் ஆண்டில் தொழிற்கல்வியும், இரண்டாம் ஆண்டில், தொழில் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக NVQ தரச் சான்றிதழ்களும் வழங்கப்படும். NVQ 4 சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் படிப்பு வரை கற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர் சமூகத்தை தயார்படுத்தும் வகையில், இத்தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்வாண்மையாளர்களாக வௌிநாடு செல்ல விரும்புவோருக்கு இத்தொழிற் கல்வி சிறந்த வழிகாட்டல்களை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான தகவல்களை www.tvec.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT