மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு | தினகரன்

மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு

மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு-Ministers Sworn-Dinesh-Keheliya-Wasudeva-Asoka Priyantha

அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட நால்வர் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் நால்வரும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகிய இருவரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், கெஹலிய ரம்புக்வெல்ல இராஜாங்க அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டதோடு, ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.டி. அசோக்க பிரியந்த பிரதியமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு-Ministers Sworn-Dinesh-Keheliya-Wasudeva-Asoka Priyantha1. தினேஷ் குணவர்தன -  மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு-Ministers Sworn-Dinesh-Keheliya-Wasudeva-Asoka Priyantha

2. வாசுதேவ நாணயக்கார - தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்

மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு-Ministers Sworn-Dinesh-Keheliya-Wasudeva-Asoka Priyantha
3. கெஹலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்
மேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு-Ministers Sworn-Dinesh-Keheliya-Wasudeva-Asoka Priyantha

4. ஆர்.டி. அசோக்க பிரியந்த - கலாசாரம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர்.

Add new comment

Or log in with...