8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு | தினகரன்

8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு

2 அமைச்சர்கள், ஒரு இராஜாங்கம்,   பிரதி அமைச்சர்கள் நேற்று நியமனம்

 இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்காரவும்

பெருநகரங்கள், மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அதேவேளை, ஊடகத்துறை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஆர்.டி.அசோக பிரியந்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இது வரை 17 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 08 இராஜாங்க அமைச்சர்களும் 09 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது வரை ஐ.தே.க தரப்பில் இருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்துள்ளதோடு இதில் 3 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் 3 பிரதி அமைச்சர்களும் அடங்குகின்றனர்.நேற்று அமைச்சு பதவி ஏற்ற அசோக்க பிரியந்த புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதற்தடவையாக பாராளுமன்றம் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரனும் அரசாங்கத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. (பா)

 


Add new comment

Or log in with...