நீர்வளம் வழங்கும் மொறகஹகந்த திட்டம் | தினகரன்

நீர்வளம் வழங்கும் மொறகஹகந்த திட்டம்

நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை நீர்ப்பாசனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.விவ சாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிய யுகம் மாற்றம டைந்து வருகின்றது. மொறகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் அநேகர் நன்மையடைகின்றார்கள். மகாவலி துரித அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நிர்மாணமாக மொறகஹகந்த நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் நாட்டு மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. நீண்ட கால நன்மைகள் ரஜரட்ட மக்களுக்குக் கிடைப்பது போன்று வடக்கு,- கிழக்கு மற்றும் வடமேல் மாகாண மக்களும் நன்மையடைவார்கள்.

மழைநீரை தேக்கி மிகவும் சிரமத்துடன் விவசாயம் புரிந்த விவசாயிகளுக்கு மொறகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிம்மதிப் பெருமூச்சைக் கொண்டு வந்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்க்க மொறகஹகந்தவின் கீழ்ப் பகுதியில் உள்ளவர்களுக்காக நீர் விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உண்மையான மக்கள் நல அபிவிருத்தி ரஜரட்ட மக்களுக்குக் கிடைத்துள்ளது.

மிகவும் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேச எல்லைக் கிராமமாக இருந்த ரஜரட்ட கிராம மக்களுக்கு அபிவிருத்திக்கு உரிமை கூறக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அங்கு வளர்ச்சியடையாத கிராமங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், பெருந்தெருக்கள் புனர்நிர்மாண நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதே போல வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைப் பாதித்துள்ள சிறுநீரக நோய்க்கும் தீர்வாக குடிநீர் திட்டமொன்று மொறகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மகாவலி வலய மக்களின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சூழல் அபிவிருத்தியை மேம்படுத்தல் மொரகஹகந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குடிநீர்ப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பொலநறுவை மாவட்டத்தில் 6662.45 மில்லியன் ரூபா செலவில் குடிநீர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டத்துக்கும் மொறகஹகந்த நீர்த் தேக்கத் திட்டத்தின் மூலம் பங்களிப்பு வழங்கப்படும். கிளிநொச்சி மாவட்ட மக்கள் தொகையில் 140,000 க்கும் அதிகமானோருக்கு குடிநீர் வசதி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 650,000 அதிகமான மக்களும் நன்மையடைவார்கள்.

இலங்கையிலுள்ள காணிகளில் நூற்றுக்கு நாற்பத்தொரு வீதமான காணிகள் மகாவலி பிரதேசத்துக்குச் சொந்தமானவை. அதிலிருந்து நெல் உற்பத்தி ஹெக்டயருக்கு 5.5 தொன் அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நெல்லுற்பத்தியைப் பெற முடியாது. தற்போதுள்ள உற்பத்தியின் அளவினை அதிகரிப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

துமிந்த அளுத்கெதர
(தினமின)


Add new comment

Or log in with...