Friday, March 29, 2024
Home » தேசிய விளையாட்டு சபை புதிய உறுப்பினர் நியமனம்

தேசிய விளையாட்டு சபை புதிய உறுப்பினர் நியமனம்

by damith
December 5, 2023 5:48 am 0 comment

தேசிய விளையாட்டு சபையின் புதிய தலைவராக கலாநிதி மையா குணசேகர விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்களை நேற்று (04) வழங்கினார்.

அதன்படி விளையாட்டு சபையின் தலைவராக மையா குணசேகர பெயரிடப்பட்டுள்ளதுடன், செயலாளராக ஐ.யு. விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு சபை தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 15 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், தேசிய தெரிவுக்குழுவில் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 05 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தெரிவுக்குழுவின் தலைவராக முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக அர்ஜூன் ரிஷ்யா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT