Friday, April 19, 2024
Home » சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திடமிருந்து கொவிட்-19 மீளெழுச்சி விருதை பெற்ற கலாநிதி ஜயந்த தர்மதாச

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திடமிருந்து கொவிட்-19 மீளெழுச்சி விருதை பெற்ற கலாநிதி ஜயந்த தர்மதாச

by Rizwan Segu Mohideen
November 10, 2023 11:31 am 0 comment

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், நவலோக்க ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரும், கொழும்பில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் கெளரவத் தூதருமான கலாநிதி ஜயந்த தர்மதாசவுக்கு, COVID-19 Resilience Award ஐ அண்மையில் வழங்கியது. தர்மதாசவின் சிறந்த சேவைக்காக சர்வதேச நிறுவனம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்டமை ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய தனித்துவமான தருணமாகும்.

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்தால் வழங்கப்படும், COVID-19 Resilience Award, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனிநபர்களின் அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத ஆதரவு மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்படுகிறது. இந்த விருது அக்டோபர் 12, 2023 அன்று தாஜ் சமுத்ரா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கல்வி மற்றும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கலாநிதி எம். மாலிகி ஒஸ்மானால் கலாநிதி தர்மதாஸவிற்கு வழங்கப்பட்டது.

தொற்றுநோய்களின் போது சிங்கப்பூர் குடிமக்களுக்கு அத்தியாவசியமான தூதரக உதவிகளை வழங்குவதில் தர்மதாச மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தார். 40க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பத்திரமாக நாடு திரும்புவதற்கு உதவினார். இது அவர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அவரது வலுவான அர்ப்பணிப்பைக் காட்டியது.

இந்த கௌரவமான மதிப்பீட்டிற்கு நன்றி தெரிவித்த தர்மதாச, “நெருக்கடியான காலங்களில், மனித இரக்கத்தையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்தி, நமது பொறுப்புக்கு அப்பாற்பட்ட கடமைகளைச் செய்ய நாம் தடையின்றி அர்ப்பணிப்போம். COVID-19 க்கு எதிரான சிங்கப்பூரின் தற்போதைய போராட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது போன்ற அங்கீகாரங்கள் மக்களுக்காக மேலும் மேலும் சேவை செய்ய என்னை ஊக்குவிக்கிறது.” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT