Friday, April 26, 2024
Home » அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க முடிவு
பண்டிகைக் காலம் நெருங்குவதால்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க முடிவு

by damith
November 7, 2023 8:20 am 0 comment

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்தது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த நடவடிக்கைகளையடுத்து விலைகள் ஓரளவு குறைந்தன. மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் வகையில் எதிர்வரும் பண்டிகை சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு சுமுகமான நிலைக்கு திரும்பி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதே வேளை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT