இந்தியாவின் இரண்டாவது உயர் விருது பெற்ற இசை ஞானிக்கு வாழ்த்துகள் | தினகரன்

இந்தியாவின் இரண்டாவது உயர் விருது பெற்ற இசை ஞானிக்கு வாழ்த்துகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலைத்துறையில் ஒப்பில்லாப் பங்காற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா

 
இதைத் தொடர்ந்து சினிமாத்துறை சார்ந்தோரும் ராஜாவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் பலரும் அது பத்ம விருதுக்குதான் பெருமை என்று குறிப்பிட்டுள்ளனர். 

கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் 'எனக்கு மூத்தவர். என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது.' எனக் கூறியிருந்தார்.

கமல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் "பத்மவிபூஷண் விருது பெரும் மரியாதைக்குரிய உஸ்தாத் குலாம் முஸ்தபாஜி, இளையராஜா ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டு ஆங்கிலத்தில் டிவீட்டிடப்பட்டிருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்குநர் பார்த்திபன் தனது முகநூல் வழியாக... 'ஒருவழியாக பத்மவிபூஷணுக்கு விருது இளையராசா கிடைத்த மகிழ்ச்சியில் இன்றைய நாளை மிட்டாய் வழங்கி பூக்கள் தூவி சிறகடித்துப் பறக்கிறது -நம் தேசியக்கொடி எழுந்து நின்று மரியாதை செய்ஓம்! இசைக்குள் ஆழ்தலும் தியானமே!' என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன்

இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகமெங்கும் திரண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் கணக்கிலடங்கா அடிமைகளில் நானும் ஒருவன். தமிழர்கள் மட்டுமன்றி அகிலமெங்கும் தன் இசையால் ஆளும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். #எங்கள்ராஜா" என்று பதிவிட்டுள்ளார். 

செல்வராகவன்

விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டில் 'இந்தியா கடைசியில் இசைக்கு (இளையராஜாவிற்கு) பத்மவிபூஷண் விருது வழங்குகிறது' என்பதாக இருந்தது.

விஜய் ஆண்டனி

சித்தார்த்  ட்வீட்டில், "வாழ்த்துகள் பத்ம விபூஷண். இளையராஜாவை மீட் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டாய். இந்தப் பெருமிதத்தை என்ஜாய் செய்துகொள். இதே துறையில் இருக்கும் மற்றவர்களைப் பொறுமையாக சந்தித்துக்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

சித்தார்த்

இயக்குநர் லிங்குசாமி, "வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உங்களின் இசையுடனே இருக்கிறது மேஸ்ட்ரோ இளையராஜா. உங்களின் பத்மவிபூஷணுக்காகப் பெருமை கொள்கிறோம். பத்ம விருதுகள் பெரும் தோனி மற்றும் விஜயலட்சுமிக்கும் வாழ்த்துகள்." எனப் பகிர்ந்துள்ளார். 

லிங்குசாமி

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இளையராஜாவின் 'ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலை வாசித்துப் பாடி, "என்னைப் போன்ற இசைஞானியின் தீவிர ரசிகைகளும் கொண்டாடும் தருணம் இது." எனக் குறிப்பிட்டு ட்விட்டரில்  வீடியோ பதிவிட்டு வாழ்த்தினார். 

தேவி ஸ்ரீ பிரசாத்

இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "விருது... முதல் முதலில் விருதுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. தமிழருக்குப் பெருமை  #Illaiyaraja" என்றும் ஒரு நீண்ட கவிதையையும் பதிவிட்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன், 'இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு, தனது அபரிமிதமான திறமையால் உலகளவில் இசை மணம் பரப்பிவரும் 'மேஸ்ட்ரோ' இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த கவுரவம் மிகவும் பொருத்தமானது. அவரது இசையைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமிது. இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.' என்று தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார் 

டிடிவி. தினகரன்

யாரும் எதிர்பாராத விதமாக இளையராஜாவிற்கு கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில்

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை,
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன். 

என்று பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து

விருது அறிவித்த உடனே பல்வேறு பிரபலங்களும் இசைஞானிக்குத் தொலைபேசியிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...