Thursday, March 28, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
November 6, 2023 9:34 am 0 comment

முதலை உண்ட சிறுவனை மீட்டமை

திப்புக்கொளியூரில் அந்தணர்கள் வாழும் வீதி வழியாகச் சுந்தரர் சென்று கொண்டிருக்கையில் ஒருவீட்டில் மங்கல ஒலியும் எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டன. அதைக் கேட்டு வியப்புற்ற சுந்தரர் அதற்கான காரணத்தை வினவ, ஐந்து வயது நிரம்பிய இந்த இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் நீராடுவதற்காக குளத்துக்குச் சென்றனர்.

அவர்களுள் ஒருவனை முதலை விழுங்கிற்று. மற்றையவன் வீடு சேர்ந்தான். அவனுக்கு இன்று பூநூல் சடங்கு. எதிர் வீட்டில் முதலை விழுங்கிய தம் மகனை நினைத்து பொற்றோர் வருந்துகின்றனர்’ என்றனர். சுந்தரர் குளக்கரைக்குச் சென்று திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருமானை நினைந்து வணங்கி மீளா அடிமை…. என்ற பதிகத்தைப் பாடினார். இறைவன் திருவருளால் முதலை அப்பிள்ளையை கரையிற்கொணர்ந்து உமிழ்ந்தது. பின்னர் அப்பிள்ளைக்கு சுந்தரர் பூநூல் சடங்கு செய்வித்தார்.

திருப்பெருமங்கலம் என்னும் பதியில் சிறந்த சிவபக்தராகிய கலிக்காமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஏலவே சுந்தரரிடத்தில் சிறந்த நண்பராகவும் விளங்கினார். ஆயினும் சுந்தரர் தனது லௌகீக தேவைகளுக்காக சிவனைத் தூதாக அனுப்புகின்றாரே என எண்ணி அவரிடத்தில் மிக்ககோபம் கொண்டு இருந்தார்.

அத்தருணத்தில் அவருக்கு ஏற்பட்ட நோயை நீக்கும் வண்ணம் இறைவனிடம் முறையிட சுந்தரர் அதனை நீக்கி வைப்பான் என இறைவன் கூறவும் சுந்தரரது வருகையை விரும்பாத கலிக்காமர் தனது வாளினால் தன்னைத் தானே குத்தி இறக்கின்றார். அந்நிலையைக் கண்ட சுந்தரர் தானும் தனது கத்தியால் தன்னைக் குத்துவதற்காக கத்தியை ஓங்கியபோது இறைவன் அருளால் உயிர் பெற்ற கலிக்காமர் அக்காட்சியைக் கண்டு மீண்டும் சுந்தரருடன் நட்புறவு கொள்ளலானார்.

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT