Thursday, March 28, 2024
Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 61

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 61

by damith
November 6, 2023 11:36 am 0 comment

இப்பூவுலக மற்றும் பரலோக வாழ்வு. உடல் மற்றும் ஆத்மா சம்பந்தப்பட்ட வாழ்வு ஆகியவைகளின் மங்கல மயம் உண்டாக நாம் பிறர் நலம் பேணுதல் வேண்டும். பிறருக்காக வாழ வேண்டும். இவைகளை புறக்கணிப்பது என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீரழித்துவிடும். இந்த தத்துவத்தை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட வியாச முனிவர் பின் வருமாறு கூறுகிறார்.

எவன் ஒருவன், எப்போதும் பிறருக்காக வாழ்கிறானோ. பிறருடைய நலத்தையே விரும்புகிறானோ, அவன் பிறப்பின் பயனை எய்துவான். பரோபகாரம் – பிறருக்கு உபகாரம் செய்பவனுக்கு பயம் இருக்காது. அவன் இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக போற்றப்படுவான்.

மனவலிமை மிகும் போது தான் ஒருவன் தன் துணிவை, தன் உணர்வாற்றலை, திறமையை, கலை நுணுக்கத்தை காட்டிட முடியும். வெறும் புத்தி பலத்தால் மட்டும் இது சாத்தியமாகாது. இதயம் மற்றும் இதயத்தின் உணர்ச்சி வெளிப்பாடு மனிதனுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு. மனவலிமையை போல். வாழ்வில் வெற்றிக் கொள்ள சில நற்பண்புகள் உள்ளன. அவையாவன அன்பு. நன்னடத்தை, நற்குணம், சிரத்தை, பக்தி, ஈடுபாடு, உண்மை முதலியன.

படித்தவன் நற்பண்புகள் கொண்ட இதயமில்லாதவனாக இருந்தால் அவனுக்கு செல்வம், வெற்றி. புகழ் என பல இருந்தாலும் வாழ்வில் அவன் துன்பப்பட்டுக் கொண்டு தானிருப்பான். அதே வேளையில் பிறரிடம் அன்பு பாராட்டுபவன். சகோதர பாசம், தாய்பாசம், புத்திர பாசம் நம்பிக்கை, உண்மை நட்பு ஆகிய நற்பண்புகளுடன் விளங்கும் ஒருவன் படிக்காதவனாக இருந்த போதும், அவன் ஏழையாக இருந்தாலும், அவனது வாழ்வில் சுகம் நிறைந்து காணப்படும். படிக்காத பலருடைய வாழ்க்கை, குடும்ப ரீதியாகவும், தாம்பத்ய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இன் சுவை நிறைந்து காணப்படுகிறது. அறிவு. புத்தி பலம் என்றால் அன்பு, கருணை. நற்பண்பு, பக்தி, ஈடுபாடு நட்பு, நம்பிக்கை, உண்மை இவை யாவும் மனோபலமாகும்.

புத்தி பலத்தை விட மனோபலம் சிறந்தது. இவையெல்லாவற்றையும் ஒன்று படுத்தி அதற்கு வித்யா என சான்றோர்கள் பெயரிட்டுள்ளனர். தற்காலத்து கல்விமுறை இந்த ‘வித்யாவில் அடங்காது. வாழ்வில் முன்னேற வித்யா அவசியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT