Saturday, April 20, 2024
Home » மருந்துகள் விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்த சவூதி அரேபியா!

மருந்துகள் விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்த சவூதி அரேபியா!

by Rizwan Segu Mohideen
November 2, 2023 12:09 pm 0 comment

சவூதி அரேபியா சுற்றுலாத்துறையில் தானியங்கி மருத்துவ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி வீதத்தில் உலக அளவில் சவூதி அரேபியா இராச்சியம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் உலக சுற்றுலா அமைப்பினால் வெளியிடப்பட்ட உலக சுற்றுலா அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சவூதி இராச்சியம் 58 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சுற்றுலாதின நிகழ்வுகளை சவூதி அரேபியா இராச்சியம் நடத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் 27 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் இந்நிகழ்வு தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.

இரண்டு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் ஆல் சவூத் சுற்றுலா அமைப்புக்கு ஆதரவு வழங்கியதாலேயே இச்சாதனை எட்டப்பட்டதாக சுற்றுலா அமைச்சர் அஹ்மத் பின் அகீல் அல்-காதிப் கூறினார். இந்தச் சாதனைகள் புகழ்பெற்ற உலகளாவிய சுற்றுலாத் தலமாக சவூதி இராச்சியத்தை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவுதி அரேபியா மருந்துகளை வழங்க தானியங்கி இயந்திரத்தை அமைத்துள்ளது. இந்தச் சாதனை தொழில்நுட்பத் துறையில் தொடர்ச்சியான சவூதி கண்டுபிடிப்புகளில் சேர்க்கப்படும். இது உலகில் இதுபோன்ற முதல் அனுபவமாகும், இது வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்கு பங்களிக்கும், நோயாளி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி சாதனம் மின்னணு முறையில் மருந்துகளை வழங்கும்.

இவ்வியந்திரம் மருந்துகளின் பரிந்துரைக்கப்பட்ட பார்கோட் அடிப்படையில் மருந்துகளை வழங்கும். பயனாளிகள் பயன்படுத்துவதற்கான ஒரு தொடர்புத்திரை, சிறப்பு இயக்க முறைமை (ரோபோ), மருந்துகளின் தயார்நிலையை பயனாளிக்கு தெரிவிக்க ஒரு செய்தி ஆகியவற்றை இந்த இயந்திரம் கொண்டிருக்கும்.

இந்த இயந்திரம் 102-,700 மருந்துகளின் சேமிப்புத்திறனுடன் சேவை செய்கிறது. சேதம், சேதப்படுத்துதல் அல்லது திருட்டு ஆகியவற்றிலிருந்து மருந்துகளுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினசரி, மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துகள் பற்றிய புள்ளிவிபரத் தரவுகளையும் இவ்வியந்திரம் வழங்குகிறது.

மருத்துவமனையின் மருந்தியல் துறையின் இயக்குன ஓலியன் அல்-அடாவி இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்ைகயில், மருந்துடன் இணைக்கப்பட்ட பார்கோட் ஸ்கான் செய்யப்பட்டு தேவையான தரவை நிரப்புவதன் மூலம் இயந்திரம் செயல்படுகிறது என்றார்.

மின்னணு மருந்துமுறை மூலம் பயனாளியின் பரிந்துரைக்கப்பட்ட தரவை சரிபார்க்கும் முன்னர், அருகிலுள்ள விநியோகிக்கும் இயந்திரத்தை தங்கள் இருப்பிடத்திற்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கும்படி உரியவர்கள் கேட்கப்படுவார்கள்.

மருந்து அங்கீகரிக்கப்படும்போது, எந்தவொரு அவதானிப்பும் இல்லாமல், பயனாளிகள் குறியீடு மற்றும் இயந்திரத்தின் இருப்பிடத்தைக் கொண்ட ஒரு எஸ்.எம்.எஸ் பெறுவார்கள். பயனாளிகள் தங்கள் சிவில் பதிவையும், அவர்களின் தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டையும் உள்ளிடுமாறு கோரப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் மருந்துகளைப் பெற முடியும்.

எந்தவொரு நோயாளிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இயந்திரம் விநியோகிக்கிறது, மிகக்குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டிய மருந்துகளைத் தவிர, ஏனைய மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை இது மீதப்படுத்தும்.

அஷ்ஷெய்க் முஜீபுர் ரஹ்மான் (மதனி)
BA PGDE, OUSL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT