டெல்லி டெஸ்ட்: இலங்கைக்கு 410 ஓட்டங்கள் வெற்றி இலக்கு | தினகரன்

டெல்லி டெஸ்ட்: இலங்கைக்கு 410 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

டெல்லி கடைசி டெஸ்டில் இந்தியா 2-வது இன்னிங்சில் 246 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதனால் இலங்கைக்கு 410 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டதைதை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சை ஆட்டத்தை இடை நிறுத்தியது . விராட் கோலி 243 ஓட்டங்களும், முரளி விஜய் 155 ஓட்டங்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் சண்டகன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அபார பந்து வீச்சால் 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 356 ஒட்டங்கள் சேர்த்தது. சந்திமால் 147 ஓட்டங்களுடனும், சண்டகன் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 373 ஓட்டங்கள் பெற்று சனல விக்கெட்டையும் இழந்தது. மெத்யூஸ் 111 ஓட்டங்களும், சந்திமால் 164 ஓட்டங்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் இசாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுக்களும், மொகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்சில் 163 ஒட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ஓட்டங்களுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தவான் (67), விராட் கோலி (50), புஜாரா (49), ரோகித் சர்மா (50 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 52.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா ஆட்டத்தை இடை நிறுத்தியது.இலங்கை சார்பில் பந்து வீச்சில் லக்மால்,கமகே,சில்வா மற்றும் சந்தகன் ,பெரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா 409 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 410 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. 410 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ஓட்டங்கள் பெற்றது.இன்று இறுதி நாளாகும் கருணாரத்தன 13 ஓட்டங்களையும் சமரவிக்கிரம 5 ஓட்டங்களையும் லக்மால் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.பந்து வீச்சில் ஜடேஜா 2 விக்கெட்டையும் சமீ ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...