Home » விசாயின்றி நாட்டுக்குள் வரும் நடைமுறை நவ.07 முதல் அமுல்

விசாயின்றி நாட்டுக்குள் வரும் நடைமுறை நவ.07 முதல் அமுல்

by mahesh
November 1, 2023 10:40 am 0 comment

விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறை, நவம்பர் 07 முதல் அமுலுக்கு வருமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் திருத்தங்களுடன் நவம்பர் 06 இல்,அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இந்நடைமுறைக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் 07 முதல் அமுலுக்கு வருமெனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா, ரஷ்யா, சீனா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விசா இல்லாத வருகை,அடுத்த ஆண்டு 2024 மார்ச் 31 வரை அமுலிலிருக்குமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேநேரம், இலங்கை தனது சுற்றுலாத்துறையை மேலும் புத்துயிர் பெறச் செய்யும் செயல்பாட்டில் இருப்பதால், இவ்வாறான ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாய அணுகுமுறை சாதகமான முடிவுகளைத் தருமெனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT