Thursday, March 28, 2024
Home » ஜனவரியில் ‘வற்’ வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

ஜனவரியில் ‘வற்’ வரியை 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரிப்பு

by mahesh
November 1, 2023 6:04 am 0 comment

பெறுமதி சேர் வரியான ‘வற்’ வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்நடைமுறை அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ‘வற்’ வரி 15 சதவீதமாக உள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், அது 18 வீதமாக அதிகரிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதன் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி இருப்பை பலப்படுத்தும் வகையில்,வரிக் கொள்கையை மறுசீரமைப்பு செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவையின் அடிப்படையில் வரிவிதித்தல் உள்ளிட்ட புதிய வரி யோசனைகள் சிலவற்றை எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடன் நிலையான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அரச நிதி நிலைத்தன்மைக்காக 2022 ஜூன் மாதத்திலிருந்து வரி அடிப்படையை அதிகரித்தல் மற்றும் வளர்ச்சியடையும் வகையில் வரிக்கொள்கை யோசனை பலவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் பிரதிபலனாக 2022ஆம் வருடத்தோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு முதல் 09 மாதத்தில், அரசாங்கத்தின் வரி வருமானம் நூற்றுக்கு 51 வீதமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, வரி அறவீட்டு இலக்கை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இதுவரை முடியாதுள்ளது.இதனால், இதுதொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் படி வரி வருமானம் மற்றும் ஏனைய வருமான இலக்கை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி பெறுமதியின் அடிப்படையில், வரிவீதத்தில் 2024 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நூற்றுக்கு 18 வீதத்தால் வற் வரியை அதிகரிப்பதற்கும் அதேவேளை தற்போது நடைமுறையிலிருக்கும் வற் வரி பெறுமதி, இதனோடு சம்பந்தப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT