அகில இலங்கை “பல்சர் சுப்பர் சிக்ஸ்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி | தினகரன்

அகில இலங்கை “பல்சர் சுப்பர் சிக்ஸ்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

 

 

அகில இலங்கை ரீதியிலான ஆறு பேர் கொண்ட பல்சர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போடடி நேற்று குருநாகலில் ஆரம்பமானது. இச்சுற்றுப் போட்டி எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி கொழும்பில் நிறைவடையும். கிரிக்கெட்டில் ஆர்வமுடைய கிராமப்புறச் சிறுவர்கள் தமது கிராமங்களைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு முன்னிலையில் தமது திறன்களை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடனேயே மேற்படி சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் சுற்றுப்போட்டியில் வெற்றி பெறும் அணியினர் வெற்றிக் கிண்ணங்களுக்கு மேலதிகமாக, நாட்டில் மென்பந்து கிரிக்கெட்டிற்கென வழங்கப்படும் ஆகக்கூடிய பரிசுத்தொகையான 1,000,000 ரூபாவைப் பெற்றுக்கொள்ளவுள்ள அதேசமயம், இரண்டாமிடத்தைப் பெறும் அணியினர் 200,000 ரூபாவைப் பரிசுத் தொகையாகப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மேற்படி விபரங்கள் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன.

கிரிக்கெட் தற்போது நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பிரசித்திபெற்று விளங்குகின்றது. இத்தகைய போடடிகள் இளம் வீரர்கள் தமது மாவட்டங்களில் உள்ள தமது அயலவர்களுடன் சேர்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்த பெரிதும் உதவும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து சுமார் 100 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பற்கேற்குமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்படி போட்டிகள் தகைமையுள்ள அதிகாரிகளால் தெரிவு செய்யப்படும் இரண்டு விளையாட்டரங்குகளில் ‘நொக் அவுட்’ அடிப்படையில் நடாத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் இரண்டு அணிகள் கொழும்பில் நடைபெறவுள்ள போட்டிகளில் மோதவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை மென்பந்தாட்டச் சங்கத்தினால் நியமிக்கப்படும் தகைமைவாய்ந்த நடுவர்கள் கடமையாற்றவுள்ளனர்.

இந்தச் சுற்றுப்போட்டியின் பிரதம ஏற்பாட்டாளராக ‘இக்நிட் சொலுஷனில் லிமிடெட் வழங்கும் அதேவேளையில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி மற்றும் டீடற் நிறுவனம் ஆகியவை அனுசரணை வழங்குவதுடன், அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் ஊடக அனுசரணையை வழங்குகின்றது.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையபடடுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மென்பந்து கிரிக்கெட் விளையாட்டில் இளம் வீரர்களுக்கு இத்தகைய சற்றுப்போட்டி பெரும் உதவியாக அமைவதால், தனது அமைச்சு அதற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...