விசேட குழு அமைத்தாவது வடக்கில் மக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்க வேண்டும் | தினகரன்

விசேட குழு அமைத்தாவது வடக்கில் மக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்க வேண்டும்

பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் காணி விடுவிப்பை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

காணி அமைச்சுத் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள மக்களின் காணி விடுவிப்பை துரிதப்படுத்த வேண்டும் என

தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். எமது ஆட்சிக்காலத்தில் கிரமமான முறையில் வடக்கின் காணிகளை விடுவித்து வந்தோம். எனினும், அவர்கள் தற்பொழுது துரிதமான காணிவிடுவிப்பை கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கு மக்களின் காணி விடுவிப்பு குறித்து பொறிமுறையொன்றை அமைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என அமைச்சுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். வடக்கின் காணப்பிரச்சினையென்பது சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லப்படும் விடயமாகியிருப்பதால் இதனை விரைவில் தீர்க்கவேண்டிய தேவை இருப்பதாகவும் தினேஷ் குணவர்தன எம்.பி சுட்டிக்காட்டினார். இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழ் மக்கள் வாழும் தோட்டமொன்று முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கி வேறிடத்தில் குடியேற்றுமாறு அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தேன். இது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...