நிதி மோசடி; காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை | தினகரன்

நிதி மோசடி; காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவரும்  எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தங்களது சட்டத்தரணிகளுடன் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று (21) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

காமினி செனரத் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான பியதாச குடாபாலகே மற்றும் நீல் ஹபுஹின்ன ஆகிய மூவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கொள்ளுபிட்டியவிலுள்ள நினோ லங்கா ஹோட்டல் திட்டம் தொடர்பில் 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதியுடன் ஒதுக்கப்பட்ட ரூபா 18.5 பில்லியன் நிதியிலிருந்து ரூபா 4 பில்லியனை சட்டவிரோதமாக அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள மற்றுமொரு ஹோட்டல் திட்டத்திற்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...