கொலைகார வழிபாட்டு குழு தலைவர் மரணம் | தினகரன்

கொலைகார வழிபாட்டு குழு தலைவர் மரணம்

அமெரிக்காவில் படுகொலைகளுக்கு தூண்டிய ஒரு குழுவின் தலைவரான சார்ல்ஸ் மென்சன் தனது 83ஆவது வயது மருத்துவமனையில் மரணித்துள்ளார்.

சிறை அனுபவித்து வந்த மென்சன்இம்மாத ஆரம்பத்தில் கலிபோர்னிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிறன்று மரணித்துள்ளார்.

‘மென்சன் குடும்பம்’ என அழைக்கப்படும் மென்சன் வழிபாட்டாளர்கள் 1969இல் ஏழு பேரை படுகொலை செய்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் கர்ப்பமுற்றிருந்த ஹொலிவுட் நடிகை ஷரோன் டேட்டும் ஒருவராவார்.

அந்த நடிகையின் வீட்டில் இருந்த நான்கு பேர் கொடிய முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதோடு அடுத்த நாள் மென்சன் குடும்பத்தால் லொஸ் ஏஞ்சல்சில் இருக்கும் செல்வந்த தம்பதியரும் கொல்லப்பட்டனர்.

மென்சன் தம்மை இயேசுவின் மறுபிறவி என்று பின்பற்றுபவர்களை நம்பவைத்துள்ளார். எனினும் அவர் எவரையும் படுகொலை செய்யாத நிலையில் தம்மை பின்பற்றுபவர்களை கொலை செய்ய தூண்டியுள்ளார். 1971 ஆம் ஆண்டு மென்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கலிபோர்னியாவில் மரண தண்டனை அமுலில் இல்லாததால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...