தம்பிலுவில் றேன்சஸ் அணி சம்பியன் | தினகரன்

தம்பிலுவில் றேன்சஸ் அணி சம்பியன்

திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் ப்ரைட் விளையாட்டுக் கழகம் நடாத்திய 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்திற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தம்பிலுவில் றேன்சஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

விநாயகபுரம் ப்ரைட் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்திற்கான மென்பந்து சுற்றுப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுமார் 35 விளையாட்டுக் கழகங்கள் பங்கு கொண்டு இருந்தன.

இவ் சுற்றுப் போட்டிகள் 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு எட்டு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக அமைந்திருந்தது. இந்நிலையில் இறுச் சுற்றுப் போட்டிக்கு தம்பிலுவில் றேன்சஸ் அணியும் திருக்கோவில் குட்னிக் அணியும் தெரிவாகியிருந்தன.

இவ்விரு அணிகளுக்குமான இறுதிச் சுற்றுப் போட்டிகள் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை ப்ரைட் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.பிரசான் தலைமையில் விநாயகபுரம் சக்தி வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் சுற்றுப் போட்டியில் திருக்கோவில் குட்னிக் அணியினர் முதலில் துப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.இந்நிலையில் குட்னிக் அணியினர் ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்பிலுவில் றேன்சஸ் அணியினர் 3.3 ஓவர்களில் விட்கெட் இழப்பின்றி 75 ஓட்டங்களை பெற்று இச் சுற்றுப் போட்டியில் சம்பினாக தெரிவாகியதோடு வெற்றிக் கிண்ணத்தினையும் பணப் பரிசில்களையும் வெற்றி கொண்டனர்.

இவ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று இரானுவ முகாம் அதிகாரி விபுல சந்திரசிறி அவர்களும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டா மற்றும் பிரதேச விளையாட்டு கழங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும், பணப் பரிசில் களையும் வழங்கி வைத்தனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...