வெயாங்கொடை விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி | தினகரன்

வெயாங்கொடை விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி

(வைப்பக படம்)

 

இன்று (20) காலை பட்டியகொட புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில், வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீன்தெனிய பிரதேசத்தின் பட்டியகொட புகையிரத கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெயாங்கொட நோக்கி பயணித்த கார் ஒன்று புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையில், கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த எரிபொருள் தாங்கிய புகையிரதத்துடன் மோதியுள்ளது.

இதன்போது காரில் பயணித்த நால்வரும் பாரிய காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் மூவர் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மரணமடைந்த மற்றுமொருவர் குறித்த புகையிரதத்தின் மூலம் கம்பஹா புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வெயாங்கொட பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...