Home » புறக்கோட்டையில் பல கடைகள் மிகவும் ஆபத்தான நிலையில்!
தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை;

புறக்கோட்டையில் பல கடைகள் மிகவும் ஆபத்தான நிலையில்!

by sachintha
October 31, 2023 7:29 am 0 comment

ஊழியர்களது பாதுகாப்பு தொடர்பில் தீயணைப்புப் படை கவலை

கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்தக் கட்டடங்களில் பணியாற்றுவோரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி, புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 4 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தீ பரவல் காரணமாக 4வது மாடியில் இருந்த குழுவினர் வெளியே வருவதற்கு கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெருப்பினால் ஏற்படும் வெப்பம் மற்றும் புகை உள்ளிழுத்தலால் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் குழுவினரை மீட்க வந்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “நான் கட்டிடத்திற்கு வெளியே சென்று கதவு பூட்டை உடைத்துக்கொண்டு நான்காவது மாடிக்குள் நுழைந்தேன். நான்காவது மாடிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு கதவுதான் இருந்தது. அவசர காலங்களில் பாதுகாப்பான வெளியேறும் அமைப்பு இல்லை. சில நிமிடங்கள் கடந்திருந்தால், அனைவரும் இறந்திருப்பார்கள்” என அந்த அதிகாரி மேலும் கூறினார். இது குறித்து கடை ஊழியர்கள் கூறியதாவது, பல கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு நேரங்களில் கடைகளில் தங்குவதாகவும், கடை உரிமையாளர்கள் தாங்கள் இருக்கும்போதே கதவை பூட்டிவிட்டு சென்று விடுவதாகவும் தெரிவித்தனர். நாளை மறுநாள் கடைகள் திறக்கும் வரை தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT