1st Test - SLvIND: போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு | தினகரன்

1st Test - SLvIND: போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

 

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

இன்றைய போட்டியின் ஐந்தாவது நாளில் பகல் போசண இடைவேளையின் பின்னர் 231 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.

இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் (பி.ப. 4.28) போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டதோடு, போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை 75/7
நிரோஷன் திக்வெல்ல 27
தினேஷ் சந்திமால் 20

புவனேஸ்வர் குமார் 4/8


இந்தியா 172 & 352/8d
இலங்கை 294 & 75/7

போட்டியின் நாயகனாக 96 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பெற்ற புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.

இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி நாக்பூரின் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் அரங்கில் இடம்பெறவுள்ளது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...