Thursday, April 25, 2024
Home » பெர்சி காலமானார்

பெர்சி காலமானார்

by sachintha
October 31, 2023 8:51 am 0 comment

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல ரசிகரான பெர்சி அபேசேகர தனது 87ஆவது வயதில் காலமானார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி பெர்சி அண்மைக் காலமாக உடல் நலமின்றி இருந்து வந்தார். இலங்கை கிரிக்கெட் சபை அவரது நலனுக்காக கடந்த செப்டெம்பரில் 5 மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக அரங்கில் இருந்து நீண்ட காலமாக ஆதரவு வழங்கி வந்தவராக பெர்சி உள்ளார். 1979 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் தொடக்கம் அவர் இலங்கைக் கொடியை ஏந்தியபடி இலங்கை அணிக்காக ஆதரவை வழங்கி வந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT