போட்டியில் பங்குபற்ற வந்த இந்தியர் ரயில் மோதி பலி | தினகரன்

போட்டியில் பங்குபற்ற வந்த இந்தியர் ரயில் மோதி பலி

(வைப்பக படம்)
 
புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
 
பம்பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், பலியானவர் இந்திய நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நபர், விளையாட்டுத் தொடர் ஒன்றில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள நிலையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பம்பலபிட்டிய பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...