வட்டித் தொல்லையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் 2018 பட்ஜட் | தினகரன்

வட்டித் தொல்லையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் 2018 பட்ஜட்

பணம் படைத்தவர்களை மேலும் தனவந்தர்களாக்குவது அரசின் கொள்கையல்ல

தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி எல்லை கடந்த வட்டியால் மிக மோசமாக கஷ்டப்படும் மக்களை மீட்டெடுப்பதற்கு ஏற்ற வகையிலேயே 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் அதனூடாக நாடு தழுவிய ரீதியிலான வேலைத்திட்டமொன்றை அமுல் நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பணம் படைத்தவர்களை மேலும் தனவந்தர்களாக்கும் வளங்களை பெற்றுக்கொடுக்கும் கொள்கையிலிருந்து வெளியேறி பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்டெடுத்து அவர்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளையே நாம் முன்னெடுக்கவிருப்பதாகும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற வறுமையொழிப்புக்கான “கிராமசக்தி” திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தூரநோக்கின்படி 2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டில் காணப்படும் வறுமையை ஒழித்து எமது நாட்டை பிராந்தியத்தின் மிக முக்கியமான பொருளாதாரம் வளம் மிக்க நாடாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

முதற் கட்டமாகநாடு பூராவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய உரிய ஆலோசனைகளையும் திட்டங்களையும் பெற்றுக்ெகாடுத்து வறுமையிலிருந்து மக்களை செழிப்பான பாதைக்கு மீட்டெடுப்பதே இந்த தி்ட்டத்தின் பிரதான நோக்காகும்.

இந்தத் திட்டத்திற்கு மகளிரினதும் இளைஞர்களினதும் பங்களிப்பே பெரிதும் பெற்றுக்ெகாள்ளப்படும். சந்தைவாய்ப்புக்களை கூடுதலாக அவர்களுக்ேக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பிரதேச மாகாண அபிவிருத்தித் திட்டத்தோடு ஒன்றிணைத்து செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பலம்பொருந்திய மக்கள் நிறுவனத்தை கிராமிய மட்டத்திலிருந்து உருவாக்கி அனைத்து மக்களதும் பங்களிப்பையும் இதற்கு பெற்றுக்ெகாள்ளப்படும். இந்ததிட்டத்திற்கு 8000 பேரை மூலதானமாக உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, கிராம சக்தி மக்கள் திட்டத்தை விரிவாக முன்னெடுத்து நாளைய தினத்தில் நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நல்லதொரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுற்றுநிருபங்கள் மூலம் அறிவிப்புக்களை விடுத்து தாமாக முன்வந்து பணியாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதே இதன் பிரதான நோக்காகும். நாங்கள் முன்னுரிமை கொடுக்க ​வேண்டியது எங்கள் மனச்சாட்சிக்காகும்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் ரீதியில் ஒருவருக்ெகாருவர் விரல் நீட்டிக்ெகாண்டிருக்காமல் வறுமையை ஒழிப்பதற்காக கடந்த 10 தசாப்தங்களாக அனைத்து அரசுகளும் முன்னெடுத்த செயற்திட்டங்களை அனுபவங்களை கவனத்திலெடுத்து இந்த கிராமசக்தி வேலைத்திட்டத்தை பலப்படுத்துவதற்காக எல்லோரும் இணையவேண்டும். 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...