Friday, March 29, 2024
Home » எட்டு மாவட்டங்களில் யானை வேலிகள் அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு
காலநிலை சீரமைவு விவசாயத் திட்டம்

எட்டு மாவட்டங்களில் யானை வேலிகள் அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

- ரூ. 475 மில்லியன் செலவில் திட்டம் ஆரம்பம்

by sachintha
October 25, 2023 11:56 am 0 comment

 

உலக வங்கியின் நிதியுதவியுடன் விவசாய அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் காலநிலை சீரமைவு நீர்ப்பாசனத் திட்டமானது பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மத்திய நிலையங்களின் தொழில்நுட்ப உபயோகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும், விவசாய பயிர் செய்கைகளில் விவசாயிகள் தாமே பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் நடமாடும் யானை மின்சார வேலிகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அந்த செயற்திட்ட நிர்வாகப் பிரதேசத்தில் 475 மில்லியன் ரூபா செலவில் 261 மின்சார யானை வேலிகளை பொருத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

விவசாயப் பயிர்ச் செய்கை பிரதேசங்களில் யானை – மனிதர்களுக்கு இடையிலான மோதல்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக இந்த யானை வேலி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எவ்வாறெனினும் விவசாய நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அந்த வேலிகளை விவசாயிகள் அகற்றி விடலாம். நெல் பயிர் செய்கை உள்ளிட்ட அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் யானை வேலி உபயோகம் மிக பயனுள்ளதாக அமையும் என்றும் அந்த திட்டத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை சீரமைவு, விவசாயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அநுராதபுரம், குருநாகல், புத்தளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

128 கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவில் 77854. 8 ஹெக்டயாரில் 1109.3 கிலோ மீற்றருக்கு இந்த யானை வேலிகள் அமைக்கப்படவுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT