Friday, April 26, 2024
Home » நோர்வேயில் சாதனை படைத்துள்ள இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி

நோர்வேயில் சாதனை படைத்துள்ள இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி

by sachintha
October 25, 2023 8:09 am 0 comment

 

யாழ். குருநகரிலிருந்து புலம்பேர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் செல்வ மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை நோர்வேயின் முதல் தமிழ் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவரது தந்தையின் கனவு நனவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விமான கல்வியை ஆரம்பித்த இவர், ஆரம்ப பயிற்சியை அமெரிக்காவில் நிறைவு செய்தார். பின்னர் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து இறுதியாக 10.10.2023 இல் தனது விமானம் ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை,விமானியாக வரவேண்டுமென்ற அவாவினால் பல முயற்சிகளை மேற்கொண்டார். எனினும்,இவரால் விமானியாக வர முடியவில்லை.எனினும், விமானத்தை பழுதுபார்க்கும் கற்கையை நோர்வேயில் நிறைவுசெய்து விமானங்களை பழுதுபார்பவராக கடந்த 12 ஆண்டுகள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT