Tuesday, April 23, 2024
Home » மன்னார், சிலாவத்துறை மத்திய மகாவித்தியாலயத்தில் புதிய கட்டடம்
'குவைத் ஸகாத்' நிறுவன நிதியுதவியில்

மன்னார், சிலாவத்துறை மத்திய மகாவித்தியாலயத்தில் புதிய கட்டடம்

- அமைச்சர் பிரசன்ன, குவைத் தூதுவர் பங்கேற்பு

by sachintha
October 25, 2023 10:54 am 0 comment

மன்னார், சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட “குவைத் ஸகாத்” (Kuwait Zakath) நிறுவனத்தினால் புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் (23) நடைபெற்றது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கிணங்க “குவைத் ஸகாத் ஹவுஸ்” நிதியுதவியுடன் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதற்காக செலவிடப்பட்ட தொகை 200 இலட்சம் ரூபாவாகும். மேற்படி பாடசாலையில் சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் வகுப்பறைகளும், மேல் தளத்தில் பிரதான மண்டபமும் உள்ளன.

இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கைக்கான குவைத் பிரதித் தூதுவர் பத்ர் அல்னோ வைம், குவைத் ஸகாத் ஹவுஸின் பணிப்பாளர் நாயகம் மஜீத் எஸ்.எம்.எஸ். அலசெமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT